உலகில் உள்ள அத்தனை நாடுகளின் மத்தியில், குறுகிய காலக் கட்டத்தில் மிகுந்த வளர்ச்சி கண்ட நாடுகளில் கனேடிய நாடும் ஒன்று. கனடாவில் ஒரு தனி மனிதன், ஒரு மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. இவ்விடத்தில், கனடாவின் பொருளாதாரம் உலகின் மிக சிறந்த பத்து நாடுகளில் ஒன்று என்றும் அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது என்பதையும் குறிப்பிட்டாகவே வேண்டும்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி பல காரணங்களைச் சார்ந்து உள்ளது. அவை அனைத்தும் அந்நாட்டின் வளர்ச்சிக்கே துணை நிற்கின்றன. அதுபோல கனேடிய நாட்டின் வளர்ச்சிக்கும் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒரு முக்கியமான காரணம் “மக்களின் குடியேற்றம்”.
கருத்து கணிப்புகள் குறிப்பிடுவது என்னவென்றால், கனடாவில் ஐந்தில் ஒரு மனிதன் வெளிநாட்டைச் சார்ந்தவன் ஆவான். கனேடிய அரசாங்கமும் இதை ஆதரித்து இதனை மேம்படுத்தப் பல முயற்சிகளை எடுத்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் கனேடிய அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளின் முடிவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை வரவேற்க உள்ளது. அதற்கான காரணங்கள் கீழ் கண்டவாறு உள்ளன:
1. திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை: –
சிறந்த தொழிலாளர்கள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கை வகிக்கிறார்கள். ஒரு நாட்டில் தேவையான அளவிற்கு திறமையான தொழிலார்கள் இருக்குமாயின் அந்நாட்டின் வளர்ச்சி மிகச் சிறந்ததாக இருக்கும். மார்ச் மாதம் 13ஆம் தேதி ,2018ஆம் ஆண்டின் படி கனடாவில் ஏறக்குறைய 400,000 காலி பணியிடங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை நிரப்பவே கனேடிய அரசாங்கம் இவ்வாறு ஒரு முடிவினை எடுத்துள்ளது.
2. பொருளாதார வளர்ச்சியும் மக்களின் குடியேற்றமும்: –
கனேடிய நாட்டின் பொருளாதாரம் கடந்த ஐந்து ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி அந்நாட்டின் குறைவான பிறப்பு தொகையினாலும் வேகமாக வயதடையும் மக்களினாலும் மிகுந்த பின்னடைவை சந்திக்கும். அடுத்த இரண்டு தசாப்தத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில் இந்த பொருளாதார வளர்ச்சி சரிவை சந்திக்கும். அதே சமயம், மக்களின் குடியேற்றம் தடைபடாமல் இருக்குமாயின் நாட்டின் வளர்ச்சி முன்னோக்கி செல்வது மட்டுமல்லாமல் சிறந்த பொருளாதார வளர்ச்சியும் காணப்படும்.
3. வேகமாக வயதடையும் மக்களின் தொகை: –
சமீபத்திய அறிக்கைகள் குறிப்பிடுவதும் கூறுவதும் என்னவென்றால் கனேடிய அரசாங்கம் மக்கள் குடியேற்றத்தை நிறுத்துமாயின், மீதமுள்ள கனேடிய மக்கள் வேகமாக வயதடைவார்கள். 2040 ஆம் ஆண்டின் படி 26.9 சதவீத கனேடிய மக்கள் 65 வயதை தாண்டியிருப்பர். இதன் விளைவு, கனேடிய தொழிலாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுதல். தொழிலாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுமாயின் கனேடிய அரசாங்கம் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தடையின்றி வழங்க வரிப்பணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லாத நிலைக்கு தள்ளப்படும்.
2034 ஆம் ஆண்டின் படி கனடாவில் பிறப்பு எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்று கணிக்கடப்பட்டுள்ளது. அப்பொழுது கனடாவில் மக்களின் குடியேற்றமே நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். மக்களின் குடியேற்றம் கனடாவில் இன்றியமையாததாக விளங்கும். இதனை புரிந்து கொண்ட கனேடிய அரசாங்கம் வரும் நாட்களில் மக்களின் குடியேற்றத்தை அதிகரிக்க அனைத்து வித நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. கனடாவுக்கு குடிபெயர உங்களுக்கு விருப்பமிருக்குமாயெனின் இதை விட பொன்னான நேரம் இல்லை. எங்கள் நிபுணர்களை தொடர்பு கொண்டு கனடாவுக்கு செல்வதற்கான இலவச தகுதி மதிப்பீட்டை உடனே பெற்று கொள்ளுங்கள்