Canapprove WHATSAPP
GET FREE CONSULTATION

அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பிரிவில் நீங்கள் கனடாவிற்குக் குடிபெயரெலாம்!

செவிலியர்

கனடாவில் வயதானோரின் எண்ணிக்கை, மருத்துவ நிபுணர்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது. குறிப்பாக வயதானவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் செவிலியர்கள் அதிகம் தேவைப் படுகின்றனர். அதிகரித்து வரும் இத்தேவை, கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்களின் குடியேற்றத்திற்கான வழிகளைத் திறந்து வைத்துள்ளது.

தேசிய தொழில் வகைப்பாடு 3012: அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனநல செவிலியர்கள்

கனடாவில் செவிலியாராகப் பணியாற்றுவது ஒருவரின் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவல்லது.

மனிடோபா, சஸ்காட்செவன், ஆல்பர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற மாகாணங்களில், அங்கீகரிக்கப்பட்ட மனநல செவிலியர்களாக பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற நிபுணர்களை அதிகாரிகள் நியமிக்கின்றனர். இருப்பினும், கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்கள் மற்ற அனைத்து மாகாணங்களிலும் பிராந்தியங்களிலும் தனி பதிவு இல்லாமல் மனநல செவிலியர்களாக பணியாற்றலாம்.

கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்கள் ஆற்றக்கூடிய பணிகள்

  • மருத்துவ செவிலியர்
  • சமூக சுகாதார செவிலியர்
  • அவசர சிகிச்சை செவிலியர்
  • தீவிர சிகிச்சை செவிலியர்
  • செவிலியர் ஆராய்ச்சியாளர்
  • மருத்துவ சேவை ஆலோசகர்
  • தொழில்சார் சுகாதார செவிலியர்
  • தனியார் செவிலியர்
  • பொது சுகாதார செவிலியர்

இன்னும் பற்பல…

கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்கள் மற்றும் மனநல செவிலியர்கள் அதிக அனுபவத்தைப் பெறுவதால் மேற்பார்வை மற்றும் நிர்வாக பதவிகளுக்கு முன்னேறலாம்.

அங்கீகரிக்கப்பட்ட செவிலியராக கனடாவிற்குக் குடியேற ஒருவர் தகுதி வாய்ந்தவரா என்று மதிப்பிட எங்களுடைய இலவச மதிப்பீட்டுச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்களின் சராசரி ணிநேர ஊதியம்

2019 ஆம் ஆண்டில், கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்கள் சராசரியாக ஒரு மணிநேர ஊதியமாக $46 ஐப் பெற்றனர். அவர்களின் ஒரு மணிநேர சராசரி ஊதியம் பிராந்திய வாரியான வகைப்பாட்டில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

நுனாவுட் $ 86.69
வடமேற்கு பிரதேசங்கள் $ 72.57
யூகோன் பிரதேசங்கள் $ 61.41
ஆல்பர்ட்டா  $ 50
சஸ்காட்செவன்  $ 48
மனிடோபா  $ 46
ஒன்ராறியோ  $ 45.47
நியூஃபவுண்ட்லேண்ட் & லாப்ரடோர்  $ 43.96
பிரின்ஸ் எட்வர்ட் தீவு  $ 41.25
நோவா ஸ்கோடியா  $ 41
கியூபெக்  $ 41.5
புதிய பிரன்சுவிக்  $ 40.49

கனடாவில் வேலை மற்றும் படிப்பு

கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்கள் எந்தவொரு கனேடிய பல்கலைக்கழகத்திலும் பொருத்தமான பாடப் படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் பகுதிகளில் நிபுணத்துவம் பெறலாம்.

கீழுள்ள குறிப்பிடப்பட்ட துறைகளில் தேர்ச்சி பெறுவது கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்களுக்கு சிறந்த பயன்களை தரக்கூடும்.

  • அறுவை சிகிச்சை
  • மகப்பேறியல் சிகிச்சை
  • மனநல சிகிச்சை
  • சமூக ஆரோக்கியம்
  • தீவிர சிகிச்சை
  • தொழில் ஆரோக்கியம்
  • குழந்தை மருத்துவம்
  • முதியோர் மருத்துவம்
  • புனர்வாழ்வு
  • ஆன்காலஜி

கனடாவில் வேலை செய்ய, கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்கள் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

  • ஒரு பல்கலைக்கழகத்தில், கல்லூரியில் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் பாடப் படிப்பை வெற்றிகரமாக முடித்தல்.
  • நர்சிங்கின் ஏதேனுமொரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெறுவதற்கான கூடுதல் கல்விப் பயிற்சி அல்லது அனுபவம் விண்ணப்பதாரருக்கு மற்றவர்களை விட கூடுதல் மதிப்பைக் கொடுக்கும்
  • மருத்துவ செவிலியர்கள், நர்சிங் ஆலோசகர்கள், நர்சிங் ஆராய்ச்சியாளர்கள், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனநல செவிலியர்கள் என தம் பணியை விண்ணப்பதாரர் பதிவு செய்கையில், நர்சிங்கில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் வகித்திருப்பது நன்மை தரும். இதுமட்டுமின்றி, மனிடோபா, சஸ்காட்செவன், ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் யூகோன் போன்ற மாகாணங்களில் செவிலியராக பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • கனடா ஒரு விரைவான, எளிதான இடம்பெயர்வுக்கு எக்ஸ்பிரஸ் நுழைவு போன்ற சிறந்த பொருளாதார குடியேற்ற திட்டங்களை வழங்குகிறது. இது தவிர, பல மாகாண நியமன திட்டங்கள் கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க எளிதான வாய்ப்பை வழங்குகின்றன.
  • ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டங்கள் ஃபெடரல் தனித்திறன் பணியாளர் பிரிவு, கனேடிய அனுபவம் வாய்ந்த வகுப்பு மற்றும் பிற எக்ஸ்பிரஸ் நுழைவு இணைக்கப்பட்ட மாகாண நியமன திட்டங்கள் கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கான சரியான பாதையை வழங்கி வருகின்றன. தற்காலிகமாக நீங்கள் கனடாவில் தங்கி பணிபுரிய கனேடிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தால் முதுகலை பணி அனுமதி கிட்டும்.

ஒரு நர்சிங் நிபுணருக்கு வேலை செய்ய கனடா ஏன் சிறந்த இடம் என்பதை ஆராய்வோம்.

  1. செவிலியர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது:

கனடாவில் வயதான மக்கள் தொகை அதிகம் உள்ளது, அதாவது எதிர்காலத்தில் செவிலியர்களுக்கான தேவை உயரும்.

கனேடிய நர்சிங் அசோசியேஷன் 2022 ஆம் ஆண்டில் சுமார் 60000 செவிலியர்களின் பற்றாக்குறை இருக்கும் என்று கணித்துள்ளது. 2050 வாக்கில், கனேடிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். வேறுவிதமாகக் கூறினால், சுகாதார சேவைகளுக்கான தேவை மட்டுமே உயரும். இதன் பொருள் செவிலியர்களுக்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் குறையாது.

  1. அதிக சம்பளம்:

கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செவிலியர் ஆண்டுக்கு சராசரியாக, $72,800 சம்பளம் பெறுகிறார். சம்பள வரம்பும் கடந்த சில ஆண்டுகளில் நம்பமுடியாத வளர்ச்சியைக் கண்டது. எடுத்துக்காட்டாக, 2007 மற்றும் 2013 க்கு இடையில், வளர்ச்சி 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. நுழைவு மட்டத்தில் உள்ள செவிலியர்கள் ஆண்டுக்கு சராசரியாக, $60,000 மும், அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் ஒவ்வொரு ஆண்டும் $80,000 வரை சம்பாதிக்கலாம்.

  1. நெகிழ்வான பணி அட்டவணை:

கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செவிலியர் போதுமான விடுமுறை நாட்களைப் பெறுகிறார். வருடாந்திர விடுமுறை நாட்களைத் தவிர, அவர்களின் கூடுதல் நேர வேலைக்கும் அவர்கள் ஈடுசெய்யப்படுகிறார்கள். இதன் பொருள், பரபரப்பான அட்டவணை இருந்தபோதிலும், செவிலியர்கள் ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைக்கும். புலம்பெயர்ந்த செவிலியர்கள் தங்கள் வருடாந்திர விடுமுறை நாட்களிலில் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்லலாம்.

  1. மருத்துவமனைகளில் குழந்தை பராமரிப்பு வசதிகள்:

பெரும்பாலும், செவிலியர்கள், வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் கூட வேலை செய்ய வேண்டும். எனவே தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வது அவர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கும். கனடா என்பது குடும்ப நலனுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் நாடு. செவிலியர்கள் தங்கள் குழந்தைகளை அவர்கள் பணிபுரியும் போது கவனித்துக் கொள்ள உதவுவதற்காக, பல மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் குழந்தை பராமரிப்பு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளன.

  1. ஓய்வூதியம் மற்றும் ஓய்வு:

கனடாவில் கட்டாய ஓய்வூதிய வயது இல்லை, எனவே செவிலியர்கள் தங்களால் இயன்றவரை வேலை செய்யலாம். செவிலியர்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் பிராந்தியம் மற்றும் பணிபுரியும் நிறுவும் வாரியாக வேறுபடுகின்றன. இருப்பினும், ஒரு செவிலியர் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்தால், பெரிய நன்மைகள் இருக்கும்.

நீங்கள் கனடாவுக்கு குடிபெயர ஆர்வமுள்ள ஒரு செவிலியரா? கனடாவிற்குக் குடிபெயரும் தகுதி மற்றும் சாத்தியக்கூறுகளை அறிய எங்களை தொடர்பு கொள்ளவும். எங்கள் எளிமையான சேவையை வழங்க எங்கள் செயற்குழு இங்கே உள்ளது.

Contact us:

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

அழைப்புக்கு: + 91-422-4980255 (இந்தியா) / + 971-42865134 (துபாய்)

enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்

2 thoughts on “அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பிரிவில் நீங்கள் கனடாவிற்குக் குடிபெயரெலாம்!

    • Customer Support says:

      Dear Deepa,
      To work in Canada, you should have relevant work experience in your home country and also you must be registered as a licensed nurse either in Canadian Nurses Association (CAN) or in the Canadian Council for Practical Nurse Regulators (CCPNR). To know more, chat with our consultant in WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Send Us An Enquiry

Enter your details below and we'll call you back when it suits you.




    [honeypot 953b1362b63bd3ecf68]





    Enquire Now Call Now