2021-2023 ஆம் ஆண்டிற்கான கனடாவின் இம்மிகிரேஷன் லெவல் திட்டத்தின் படி, ஆண்டுக்கு 400000 க்கும் மேற்பட்ட புலம்பெயர விரும்புவோர் கனடாவில் வரவேற்கப் பட உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் படி, கனடா 2021 இல் 401000 பேரையும்; 2022 இல் 411000 பேரையும், 2023 இல் 421000 பேரையும் குடியுரிமை அளித்து வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடா கடைசியாக 400,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர விரும்புவோரை வரவேற்ற வருடம் 1913 என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய இம்மிகிரேஷன் லெவல் திட்டத்தின் படி, குடிபெயர விரும்புவோரில் 60 சதவீதம் பேர் எகனாமிக் கிளாஸ் (Economic Class) எனும் திட்டத்தின் கீழுள்ள எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) மற்றும் ப்ரோவுன்ஷியல் நாமினி ப்ரோக்ராம் (PNP) ஆகியவற்றின் மூலம் அனுமதிக்கப்படுவார்கள்.
இம்மிகிரேஷன் லெவல் பிளான் (immigration level plan) என்பது கனடா அரசு ஒவ்வொரு ஆண்டும் செய்யும் முக்கியமான குடியேற்ற அறிவிப்பாகும்.
இந்த அறிவிப்பில் தான் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை புதிய ஆட்களை நாடு வரவேற்க ஒப்பொக்கொள்ளும் என்பதை கனடா வெளிப்படுத்துகிறது.
எகனாமிக் (Economic), பேமிலி (Family), ரெபியூஜி (Refugee), ஹுமானிடரியன்(Humanitarian), மற்றும் கம்பேசொனெட் (compassionate) ஆகிய பிரிவுகளின் கீழ் புலம்பெயரை விரும்போரை கனடா வரவேற்கிறது.
முன்னதாக, மார்ச் 12 அன்று, கனடா 2020-2022 க்கான இம்மிகிரேஷன் லெவல் பிளானை அறிவித்தது.
ஆனால் அதிவிரைவில், COVID-19 தொற்றுநோயால் நாடு எல்லைகளை மூட வேண்டியிருந்தது. எனவே நடப்பு ஆண்டிற்கான குடியேற்ற இலக்கான 34100 ஐ கனடா சந்திக்கும் என்பது சாத்தியமில்லை.
ஆனால் COVID-19 தொடர்பான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், நாடு எக்ஸ்பிரஸ் என்ட்ரி டிராக்களையும், ப்ரோவுன்ஷியல் நாமினேஷன் டிராவையும் நடத்தி வருகிறது.
கனடா ஏன் இம்மிகிரேஷன் லெவலை அதிகமாக வைத்திருக்கிறது?
கனடாவின் மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 18 சதவீத மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
அதுமட்டுமின்றி, ஒரு பெண்ணுக்கு 1.47 பிறப்புகள் என்ற மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தில் நாடு உள்ளது.
மெதுவான மக்கள்தொகை வளர்ச்சி கனடாவின் பொருளாதார வளர்ச்சியையும், சமூக நலனுக்கான எதிர்கால செலவுகளையும் பாதிக்கும். எனவே இந்த நிலைமையை புலம் பெயர விரும்புவோரை வரவேற்பதன் மூலம் கனடா சமாளிக்கத்திட்டமிட்டுள்ளது.
COVID-19 இன் போது கனடா குடியேற்றம்
COVID-19 2020 ஆம் ஆண்டிற்கான கனடாவின் குடியேற்றத் திட்டங்களை கடுமையாக பாதித்தது. நாட்டில் அனுமதிக்கப்பட்ட புதிய ஆட்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிடும்போது, கனடா 64 சதவீதம் குறைவான குடியிருப்பாளர்களையே அனுமதித்திருக்கிறது. இதனால், பர்மனண்ட் விசா பெற்றவர்கள் கூட பயணக் கட்டுப்பாடு காரணமாக நாட்டிற்கு பயணிக்க முடியவில்லை.
சுற்றுச்சூழல் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், குடியேற்றம் நாட்டை சிறந்ததாக்கும் என்று கருதுவதால் கனேடியர்கள் குடியேற்றம் குறித்து நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளில் பல புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அண்டை நாடான அமெரிக்காவிற்கு இது முரணானது.
கனடியர்கள், வெளிநாட்டவர்களின் குடியேற்றம் (immigration) COVID-19 ஆல் முடங்கிக்கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு உதவியாக இருக்கும் என கருதுகின்றனர். கனடா வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர விரும்புவோரை அனுமதிக்கும்.
எனவே கனடாவுக்கு நிரந்தரமாக செல்வது பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இன்றே அதற்கான பணிகளைத் தொடங்குங்கள்.
வழிகாட்ட நாங்கள் இங்கே இருக்கிறோம்! CanApprove ஐ இப்போதே தொடர்பு கொள்ளவும்!