செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குடியேற கனடா சிறந்த நாடு என்று பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள ஆய்வு கூறுகிறது. அதிக திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நுழைவு மற்றும் நிரந்தர வதிவிடத்திற்கான தெளிவான பாதைகளை கனடா வழங்குகிறது என்று ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளுக்கு குடியேற்றம் (வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்வோர்) எவ்வாறு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையில் போட்டித்தன்மையுடன் செயலாக்கம் செய்ய உதவுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் படி, கனடாவில் பல்துறை மற்றும் எளிமையான குடியேற்ற முறை இருப்பது அறியப்பட்டது. இது வெளிநாடு வாழ் செயற்கை நுண்ணறிவு வல்லுநர்களை ஈர்ப்பதற்கு உதவும் என்பதில் ஐயமில்லை. அதே போல், இந்த ஆய்வின்படி அடுத்த ஆண்டுகளில், கனடா செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முன்னேறி சிம்ம சொப்பனத்தில் அமரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்ட்ரீல் முதல் வான்கூவர் வரை உலகின் முன்னணி AI நிறுவனங்கள் கனடா முழுவதும் செயல்பட்டு வருகிறது.
IT நிபுணர்களுக்கு கனடா ஏன் சிறந்த தேர்வாக இருக்கிறது?
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பணி விசா கால வரம்புகள் மூன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை உள்ளன. பணி விசா புதுப்பித்தல்களின் எண்ணிக்கையிலும் ஒரு குறிப்பிட்ட கால வரம்பு உள்ளத்து. ஆனால் கனடாவில், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்கும் வரம்பு ஏதும் இல்லை, ஏனெனில் பணி அனுமதியின் காலம் வேலை வழங்கும் முதலாளியால் தீர்மானிக்கப்படுகிறது.
இரண்டாவதாக, மற்ற இரண்டு நாடுகளுடன் ஒப்பிடும்போது கனடாவில் பணி அனுமதிகளுக்கான செயலாக்க நேரம் குறைவாக உள்ளது. கனடாவில், பணி விசா செயலாக்க நேரம் வெறும் 2-8 வாரங்கள் மட்டுமே ஆகும், மற்ற நாடுகளில், ஒருவர் பணி விசா பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
தவிர, கனடா வெளிநாடு வாழ் மக்களுக்கு ஆண்டு முழுவதும் பணி அனுமதி அளிக்கிறது, ஆனால் அமெரிக்காவில், H1-B விசா விண்ணப்பதாரர்கள் நெடுமாதங்கள் காத்திருக்கக்கூடும்.
மேலும், விசா அல்லது பணி அனுமதி உள்ள தொழிலாளர்கள் நிரந்தர வதிவிடத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்க அனுமதிக்கும் ஒரே நாடு கனடா மட்டுமே. மற்ற எல்லா நாடுகளிலும் காத்திருப்பு நேரம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை மாறுபடும்.
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான கனடா குடியேற்ற பாதைகள்
100+ க்கும் மேற்பட்ட குடியேற்றப்பாதைகளையும், திட்டங்களையும் கனடா செயல்படுத்திவருகிறது. தனித்திறன் தொழிலாளர்களுக்கான முக்கிய பாதை எக்ஸ்பிரஸ் நுழைவு ஆகும், இது கனடாவின் நான்கு முக்கிய பொருளாதார குடிவரவு திட்டங்களின் கீழ் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பங்களை நிர்வகிக்கிறது.
விண்ணப்பங்கள் விரிவான தரவரிசை அமைப்பின் (Comprehensive Ranking System) அடிப்படையில் செயலாக்கப்படுகின்றன, மேலும் விண்ணப்பங்களின் செயலாக்கம் முடிவு பெற ஆறு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். மாகாண நியமன திட்டங்கள் மற்றொரு குடியேற்றத் திட்டமாகும். இதன் கீழ் கனேடிய மாகாணங்கள் நிரந்தர வதிவிடத்திற்குத் தேவையான திறன்கள் மற்றும் தகுதிகளுடன் உள்ள குடியேற்ற வேட்பாளர்களை பரிந்துரைக்க முடியும்.
ஒன்டாறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற மாகாணங்களில் வெளிநாட்டு தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கான பிரத்யேக குடியேற்ற திட்டங்கள் உள்ளன. ஒன்டாறியோ டெக் பைலட் என்பது ஆறு தொழில்நுட்ப தொழில்களில் ஒன்றில் பணி அனுபவம் உள்ள தொழிலாளர்களுக்கானது.
அதே நேரத்தில், பிரிட்டிஷ் கொலம்பியா டெக் பைலட் 29 தொழில்நுட்ப தொழில்களில் ஒன்றில் பணி அனுபவம் உள்ள வேட்பாளர்களை குறிவைக்கிறது.
2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கனடாவின் குளோபல் டேலண்ட் ஸ்ட்ரீம், சர்வதேச தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் பணி விசாக்களை வழங்குகிறது.
AI மற்றும் IT தொழில் வல்லுநர்கள் செழிக்க கனடா மிகுந்த தொழில் திட்டங்களை வழங்குகிறது. கனடாவுக்கு நிரந்தரமாக செல்ல உங்கள் சாத்தியக்கூறுகளைப் பற்றி மேலும் அறிய இப்போது CanApprove ஐ தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் மட்டற்ற சேவை வழங்க காத்திருக்கிறோம்.
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள
அழைப்புக்கு: + 91-422-4980255 (இந்தியா) / + 971-42865134 (துபாய்)
enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்