கனடாவில் பொறியியலாளர்களுக்கான குடிபெயரும் வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரம்!

Vignesh G
By Vignesh G
Developer

வணக்கம்! என்ஜினீர்ஸ் கனடா வெளியிட்டுள்ள 2025 அறிக்கைக்கான கணிப்புகளின்படி, ஓய்வு பெரும் பொறியாளர்கள் மிகுந்த அளவில் உள்ளதால் ஆள்வளப் பற்றாக்குறையைக் கனடா எதிர்கொள்ளும் என்றெதிர்பார்க்கப்படுகிறது. 2025 க்குள் 100,000 க்கும் மேற்பட்ட பொறியாளர் வேலைகள் கனடாவில் நிரப்பப்பட வேண்டும் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

கனடாவில் பொறியியலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அவர்களுக்கான தொழில் குறித்த விரைவான அட்டவணை அலசல் கீழ்வருமாறு.

கனடாவில் பொறியாளர் வேலைகளின் வகைப்பாடு

கனடாவில் உள்ள பொறியியலாளர்களுக்கான மகிழ்வூட்டும் வாழ்க்கை, பின்வரும் தேசிய தொழில் குறியீடு வகைப்பாட்டின் கீழ் பொருந்தக்கூடிய ஒரு வேலையைக் கண்டுபிடிப்பதில் தொடங்குகிறது.

0211 பொறியியல் மேலாளர்கள்
2131 கட்டிடப் பொறியாளர்கள்
2132 இயந்திர பொறியாளர்கள்
2133 மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள்
2134 இரசாயன பொறியாளர்கள்
2141 தொழில்துறை மற்றும் உற்பத்தி பொறியாளர்கள்
2142 உலோகவியல் பொறியாளர்கள்
2143 சுரங்க பொறியாளர்கள்
2144 புவியியல் பொறியாளர்கள்
2145 பெட்ரோலிய பொறியாளர்கள்
2146 விண்வெளி பொறியாளர்கள்
2147 கணினி பொறியாளர்கள்
2148  பிற பொறியாளர்கள்
2173 மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள்

கனடாவிற்குக் குடியேற ஒருவர் தகுதி வாய்ந்தவரா என்று மதிப்பிட எங்களுடைய இலவச மதிப்பீட்டுச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு பொறியாளராகக் கனடாவுக்கு இடம்பெயரப் பரிசீலிக்கப்படும் தேர்வுக் காரணிகள்

கனடாவுக்கு இடம்பெயர எந்தவொரு தொழில் வல்லுனரும் இந்த ஆறு அடிப்படை தேர்வுக் காரணிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

மொழித் திறன்

உங்கள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு திறன்களை நிரூபிக்க ஐ.இ.எல்.டி.எஸ் போன்ற சில அங்கீகரிக்கப்பட்ட மொழிச் சோதனைத் தேர்வுகளை நீங்கள் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.

கல்வி

கனடாவில் பெரும்பாலான பொறியியல் சார்ந்த வேலைகளைப்பெற ஒருவர் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

அனுபவம்

சம்பந்தப்பட்ட துறையில் போதுமான பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்குக் குடிவரவு மதிப்பெண்களின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

வயது

இளம் வயதுடைய ஆட்கள் குடியேறுவதையே கனடா விரும்புகிறது. 18-40 வயதுக்குட்பட்ட தொழில் வல்லுநர்கள் கனடாவில் அதிகம் வரவேற்கப்படுகிறார்கள்.

வேலை வாய்ப்பு

இடம்பெயர்வதற்கு முன்பு கனடாவில் நீங்கள் வேலை கிடைத்தவராக இருந்தால் உங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும்.

தகவமைப்பு: நீங்கள் உங்கள் மனைவியுடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தால் இது பொருந்தும். உங்கள் மனைவியின் திறன்களை மதிப்பிட்டுக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கனடாவுக்கு பொறியாளராக குடியேறுவது…

கனடா மாகாண நியமன திட்டங்கள் மற்றும் கனடா எக்ஸ்பிரஸ் நுழைவு அமைப்பு கனடாவுக்கு பொறியியலாளர்கள் இடம்பெயர்வதற்கான சிறந்த பாதையை வழங்குகிறது. இத்தகைய குடியேற்ற திட்டங்களின் கீழ் கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு ஒருவர் எளிதாக விண்ணப்பிக்கலாம்.

பல கனேடிய மாகாணங்கள் வழங்கும் பல்வேறு குடிவரவு திட்டங்களின் கீழ் பொறியாளர்கள் கனடாவுக்குக் குடிபெயரும் வாய்ப்பைப் பெறலாம்.

அந்தக் குடிவரவுத் திட்டங்கள் பின்வருமாறு…

ஆல்பர்ட்டா

  • ஆல்பர்ட்டா வாய்ப்பு பிரிவு
  • ஆல்பர்ட்டா எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிவு

பிரிட்டிஷ் கொலம்பியா

  • பி சி பி.என்.பி தொழில்நுட்ப பைலட்
  • எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிட்டிஷ் கொலம்பியா

ஒன்டாறியோ

  • ஒன்டாறியோ எக்ஸ்பிரஸ் நுழைவு: மனித மூலதன முன்னுரிமைகள் பிரிவு
  • இன்-டிமாண்ட் ஸ்கில்ஸ் (உடனடித்தேவை) பிரிவு

மனிடோபா

  • மனிடோபா தனித்திறன் பணியாளர்
  • வெளிநாட்டு தனித்திறன் பணியாளர்

நியூ பிரன்சுவிக்

  • எக்ஸ்பிரஸ் நுழைவு தொழிலாளர் சந்தை பிரிவு
  • முதலாளி ஆதரவுடன் தனித்திறன் பணியாளர்கள்

நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர்

  • நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் எக்ஸ்பிரஸ் நுழைவு தனித்திறன் பணியாளர்
  • தனித்திறன் பணியாளர் வகை

நோவா ஸ்கோடியா

  • நோவா ஸ்கோடியா தேவை: எக்ஸ்பிரஸ் நுழைவு
  • நோவா ஸ்கோடியா எக்ஸ்பிரஸ் நுழைவு தொழிலாளர் சந்தை முன்னுரிமைகள்
  • தனித்திறன் பணியாளர் பிரிவு

வடமேற்கு பிரதேசங்கள்

  • வடமேற்கு பிரதேசங்கள் – எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிவு
  • தனித்திறன் பணியாளர் பிரிவு
  • கிரிட்டிகல் இம்பாக்ட் தொழிலாளர் பிரிவு

சஸ்காட்செவன்

  • சர்வதேச தனித்திறன் பணியாளர் – வேலைவாய்ப்பு சலுகை
  • சர்வதேச தனித்திறன் பணியாளர் – தொழில்களில் தேவை
  • சர்வதேச தனித்திறன் பணியாளர் – சஸ்காட்செவன் எக்ஸ்பிரஸ் நுழைவு

பிரின்ஸ் எட்வர்ட் தீவு

  • PEI PNP எக்ஸ்பிரஸ் நுழைவு
  • தனித்திறன் பணியாளர் பிரிவு
  • கிரிட்டிகல் இம்பாக்ட் பணியாளர் பிரிவு

யூகோன்

  • யூகோன் எக்ஸ்பிரஸ் நுழைவு (YEE)
  • தனித்திறன் பணியாளர்
  • கிரிட்டிகல் இம்பாக்ட் பணியாளர்

ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நுழைவு முறை விரைவாகக் கனடா குடியேற அமைக்கப்பட்ட பாதையாகும். இது பெடரல் தனித்திறன் தொழிலாளர் திட்டம், கனடிய அனுபவ வகுப்பு மற்றும் கூட்டாட்சித் தனித்திறன் வர்த்தகத் திட்டம் போன்ற கூட்டாட்சித் திட்டங்களைக் கொண்டுள்ளது.

கனடாவில் பொறியாளர்களின் சராசரி மணிநேர ஊதியம்

கனடாவில் உள்ள பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு வகை பொறியியலாளர்கள் சராசரியாக CA $ 78,714 ஊதியத்தைப் பெறுகின்றனர்.

பிராந்திய வாரியாக பொறியியலாளர்களின்  சராசரி ஆண்டு ஊதியம் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள பொறியியலாளர்கள் தனித்திறன் தொழிலாளர் பிரிவின் கீழ் நேரடியாக விண்ணப்பிக்கின்றனர். எக்ஸ்பிரஸ் நுழைவு சுயவிவரம் கனடாவுக்கு விரைவாக குடியேற விரும்பும் இத்தகைய தனித்திறன் தொழிலாளர்களுக்கு மட்டுமே.

உங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு சுயவிவரம் விரிவான தரவரிசை அமைப்பில் (CRS) வயது, கல்வித் தகுதி, பணி அனுபவம், ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிகளில் மொழித் தேர்ச்சி மற்றும் மனைவியின் (அவரும் தங்களோடு விண்ணப்பித்தால்) திறன்கள் போன்ற பிற காரணிகளை உள்ளடக்கி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

மாகாணத்தால் பரிந்துரைக்கப்படுவதற்கு நீங்கள் தகுதியுற்றவர் என்றால், உங்கள் CRS மதிப்பெண் 1200 கணக்கிடப்படுகிறது. கனடாவில் ஒரு நிரந்தர குடியிருப்புக்கு நீங்கள் ஏதேனுமொரு கனடிய மாகாணத்தால்  பரிந்துரைக்கப்பட்டால் கூடுதலாக 600 மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

கனடாவுக்கான குடியேற்றம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு CanApprove ஐ தொடர்பு கொள்ளவும். உங்களுக்கன மட்டற்ற சேவையை வழங்க எங்கள் குழு இங்கே உள்ளது. உங்களைப்போல் எண்ணற்ற கனடா குடிபெயரும் ஆசையுடன் இருந்த பலரை இன்று கனடா குடியுரிமை பெறச்செய்த பெருமை CanApprove இடம் உள்ளது. இன்றே அணுகுவீர்!

 

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

அழைப்புக்கு: + 91-422-4980255 (இந்தியா) / + 971-42865134 (துபாய்)

enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்