Canapprove WHATSAPP
GET FREE CONSULTATION

சமூக சேவை ஊழியர்களை அழைக்கிறது கனடா! குடிபெயர விருப்பமா?

சமூக சேவை

2020 ஆம் ஆண்டில் கனடாவில் அதிகம் தேவைப்படும் 20 துறைகளின் பணியாளர்களில் சமூக சேவையாளர்களும் அடங்குவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கனடாவின் 6 மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் சமூக சேவையாளர்களுக்கு அதிக தேவை உள்ளது, மேலும் உங்கள் தொழில் திறமையின் அடிப்படையில் நீங்கள் ஆண்டுக்கு, 75,065 முதல், 8 95,843 வரை சம்பாதிக்க முடியும்! நீங்கள் தேர்வு செய்ய பல்வேறு இம்மிகிரேஷன் பாதைகள் மட்டுமின்றி, ஏராளமான வேலை வாய்ப்புகளும் உள்ளன

ஜாப் பேங்க் – ன் கூற்றுப்படி, 2018 ஆம் ஆண்டில், 73,600 சோசியல் ஒர்க்கேர்ஸ் எனப்படும் சமூக சேவையாளர்கள் வேலைவாய்ப்பைக் கண்டனர், மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் 2028 ஆம் ஆண்டில் 28,400 ஆக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது!

Canada Pnp finder

உங்கள் கனடா இம்மிகிரேஷன் செயல்முறையை இனிதே தொடர ஆயத்தமாகுங்கள்.

கனடாவிற்குக் குடியேற ஒருவர் தகுதி வாய்ந்தவரா என்று மதிப்பிட எங்கள் இலவச ஆன்லைன் விசா மதிப்பீட்டுச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

கனடாவுக்குச் செல்லும்போது மிகப்பெரிய கவலைகளில் ஒன்று, நீங்கள் வேலையைக் கண்டுபிடிக்க முடியுமா இல்லையா என்பதுதான். கனடாவில் சமூக சேவையாளர்களுக்கான வேலைகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் கீழே உள்ளன.

 

கனடாவில் சமூக சேவையாளர்களுக்கு உண்மையில் வேலை வாய்ப்பு இருக்கிறதா?

ஆம்! முன்னர் குறிப்பிட்டுள்ளபடி, 11 கனேடிய மாகாணங்களில் 6 மாகாணங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளது. இந்த வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் கனடாவின் ப்ரைரி மற்றும் அட்லாண்டிக் மாகாணங்களில் காணப்படுகின்றன:

அடுத்த சில ஆண்டுகளில், விரிவாக்கம் மற்றும் மாற்றீடு தேவை காரணமாக 27,100 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அத்துடன் எதிர்காலத்தில் கனடாவில் வாழவும் வேலை செய்யவும் விரும்பும் பட்டதாரிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான 28,400 புதிய பதவிகள் உருவாக்கப்படும்.

 

கனடாவில் சமூக சேவையாளர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?

கனடாவில் சம்பளம் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது, ஒரு அனுபவமிக்க சமூக சேவையாளராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு, $75,065 முதல், $95,843 வரை சம்பாதிக்கலாம். இது கனடாவில் குடியேற நீங்கள் தேர்வு செய்யும் இடத்தைப் பொறுத்தது:

 

கனடாவில் சமூக சேவையாளர்களுக்கான சராசரி ஆண்டு சம்பளம்

 

மாகாணம் சராசரி சம்பளம் (CAD)
ஆல்பர்ட்டா $ 95,843
வடமேற்கு பிரதேசங்கள் $ 86,639
யூகோன் $ 86,540
ஒன்டாரியோ $ 79,911
நோவா ஸ்கோஷியா $ 78,564
நுனாவுட் $ 76,437
பிரிட்டிஷ் கொலம்பியா $ 75,065
நியூஃபவுண்ட்லேண்ட் & லாப்ரடோர் $ 74,978
சஸ்காட்செவன் $ 71,911
கியூபெக் $ 67,543
நியூ பிரன்சுவிக் $ ​​65,747
பிரின்ஸ் எட்வர்ட் தீவு $ 61,519
மனிடோபா $ 54,832

 

கனடாவில் சமூக சேவையாளர்கள் எங்கே வேலை செய்கிறார்கள்?

ஒரு வெளிநாட்டு தொழிலாளி என்ற முறையில், கனடாவில் மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள், மனநல கிளினிக்குகள், பள்ளிகள், குழந்தைகள் நலன், குடும்ப சேவை மற்றும் சமூக வீட்டுத் துறைகள், திருத்தம் செய்யும் வசதிகள், அரசுத் துறை மற்றும் குடும்ப நீதிமன்றங்கள், பணியாளர் உதவித் திட்டங்கள், பள்ளி வாரியங்கள் மற்றும் தனியார் ஆலோசனை போன்ற துறைகளில் வேலை பார்க்கலாம். சமூக சேவைகளில் வேலை வாய்ப்புகளை வகைப்படுத்த கனேடிய அரசாங்கம் பயன்படுத்தும் வெவ்வேறு தேசிய தொழில் வகைப்பாடு (NOC) குறியீடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

கனடாவில் சமூக சேவையாளர்களுக்கான தொழில்கள்

NOC குறியீடு தொழில்
0423 சமூகம் மற்றும் சீர்திருத்த சேவைகளில் மேலாளர்கள்
4033 கல்வி ஆலோசகர்கள்
4152 சமூக சேவையாளர்கள்
4153 குடும்பம், திருமணம் மற்றும் பிற தொடர்புடைய ஆலோசகர்கள்
4212 சமூக சேவை ஊழியர்கள்
 

எக்ஸ்பிரஸ் என்ட்ரி

எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) அமைப்பு ஒரு சமூக சேவையாளராக கனடாவுக்கு குடியேறுவதற்கான எங்கள் சிறந்த தேர்வாகும். இது அதிவேகமானது மட்டுமல்லாமல், கனடாவுக்கு குடியேறுவதற்கான எளிய வழிகளில் ஒன்றாகும். சரியான வயது, பிரெஞ்சு / அல்லது ஆங்கிலத்தில் மொழித் திறன், தகுதிகள் மற்றும் பிற அளவுகோல்களுடன் நீங்கள் 6 மாதங்களுக்குள் கனடாவுக்குச் செல்லலாம்!

 

மாகாண நியமனத் திட்டம்

மாகாண நியமனத் திட்டம் ஸ்கில்டு மற்றும் செமி ஸ்கில்டு விண்ணப்பதாரர்களை கனடாவில் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது. கனடாவில் பெரும்பாலான குடியேற்ற திட்டஙகளுக்கு குறைந்தபட்சம் 1 வருடம் உங்களுக்கு சரியான வேலை வாய்ப்பு தேவைப்படும். 11 மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் அவற்றின் சொந்த மாகாண நியமனத் திட்டங்களைக் (PNP) கொண்டுள்ளன, ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தொழிலாளர் தேவைகளைக் கொண்டுள்ளன. நீங்கள் தேர்ந்தெடுத்த மாகாணத்திற்கோ அல்லது பிரதேசத்திற்கோ உங்கள் பணியில் இருப்போர் தேவைப்பட்டு நீங்களும் அவர்களுள் ஒருவராத் மாகாண பரிந்துரையை நீங்கள் பெரும் பட்சத்தில், 600 கூடுதல் CRS புள்ளிகள் உங்களுக்கு கிடைக்கும், அதாவது நீங்கள் கனேடிய நிரந்தர வதிவிடத்திற்கான தேர்ச்சியைப்பெறுகிறீர்கள்.

நீங்கள் ஒரு சமூகப்பணியாளராக கனடாவிற்குக்குடிபெயரை விரும்பினால் CanApprove-ஐ அணுகவும். எங்கள் செயற்குழு உங்களுக்கு சிறந்த குடியேற்ற சேவையை வழங்கும். மேலும் அறிந்துகொள்ள எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

 

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

அழைப்புக்கு: + 91-422-4980255 (இந்தியா) / + 971-42865134 (துபாய்)

enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Send Us An Enquiry

Enter your details below and we'll call you back when it suits you.




    [honeypot 953b1362b63bd3ecf68]





    Enquire Now Call Now