ஆசிரியப்பணி உலகின் மிக முக்கியமான மற்றும் மரியாதைக்குரிய உத்யோகங்களில் ஒன்றாகும். திறமையான மற்றும் ஊக்கமளிக்கும் கல்வியாளர்களின் தேவை உலகெங்கிலும் அதிகம் உள்ளது. கனடாவும் இதில் அடங்கும்.
OECD கருத்துக் கணிப்புப்படி, கனடா உலகின் மிகவும் படித்த நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது, ஜனத்தொகையில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 56% க்கும் மேற்பட்டவர்கள் இளங்கலை தகுதி பெற்றுள்ளனர்.
நீங்கள் பயிற்சி பெற்ற ஆசிரியரா? கற்பிக்க கனடா செல்ல விரும்புகிறீர்களா? இந்த கட்டுரை உங்களுக்காக மட்டுமே. மேப்பிள் இலைகளின் வதிவிடமான கனடா நாட்டில் பதிவுசெய்யப்பட்ட ஆசிரியராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றின் அடிப்படைத் தகவல்களை இங்கே கூறி இருக்கின்றோம்.
கனடாவின் உத்யோக வங்கியைப் பொறுத்தவரை, 2019 மற்றும் 2028 க்கு இடையில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 53,700 புதிய வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், அதாவது கனடாவின் கல்வித் துறை கணிசமான ஆசிரியப்பணியாளர்களை அமர்த்தும் என்றெதிர்பார்க்கப்படுகிறது .
ஆசிரியராக கனடாவுக்கு எவ்வாறு குடியேறுவது என்பதை அறிய இந்த எளிய வழிமுறைகளைப் பாருங்கள்.
- கீழே குறிப்பிட்டுள்ள உங்கள் NOC குறியீடு மற்றும் நீங்கள் சார்ந்த வேலையே கண்டறியவும்.
- நீங்கள் எந்த மாகாணம் அல்லது பிரதேசத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்க
- ஆசிரியராக பணியாற்றத் தேவைப்படும் சர்வதேச அங்கீகாரம் பெறுவதைப் பற்றிக் கனடாவின் உள்ளூர் ஆசிரியர் சங்கக் குழுவுடன் பின்வரும் தேவைகளை சரிபார்க்கவும்
- கல்வியில் தேவையான பட்டம்
- மாகாணத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கற்பித்தல் சான்றிதழ்
- ஆங்கிலம் அல்லது பிரஞ்சு போன்ற இரண்டாவது மொழியைக் கற்பிப்பதற்கான சான்றிதழ்
- ஏதேனும் ஒரு மாகாணத்திலோ அல்லது பிறந்தயத்திலோ உள்ள ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் சான்றிதழ்
- உத்யோகத்தில் பரிந்துரைக்கப்பட்ட கடிதம்
- தேவைப்பட்டால் ECA (கல்வி நற்சான்றிதழ் மதிப்பீடு) க்கு விண்ணப்பிக்கவும்;
- நீங்கள் குடியேறுவதற்கு முன்பு கனடாவில் வேலை தேடுங்கள்
இதனைத் தாமாகச்செய்வது சிறிது கடிதம் தான்! எனவே ICCRC பதிவு செய்யப்பட்ட குடிவரவு சேவை வழங்குநரைக் கண்டறியவும். அவர் உங்களுக்கு உதவுவார்.
கனடாவிற்குக் குடியேற ஒருவர் தகுதி வாய்ந்தவரா என்று மதிப்பிட எங்கள் இலவச ஆன்லைன் விசா மதிப்பீட்டுச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கனடாவில் ஆசிரியர்கள் பணியாற்றக்கூடிய ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. கீழே பட்டியலிடப்பட்ட குறியிடுகள் நீங்கள் குடிபெயரத் தேர்ந்தெடுக்கும் வகைப்பாடை விவரிக்கின்றது.
கனடாவில் ஆசிரியர்களுக்கான மிக முக்கியமான NOC பட்டியல் குறியீடு
NOC குறியீடு | திறன் நிலை | வகை | எடுத்துக்காட்டுகள் |
---|---|---|---|
4032 | A | ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியர் |
· தொடக்கப்பள்ளி ஆசிரியர் · ஆங்கில மொழி ஆசிரியர் · பிரெஞ்சு ஆசிரியர் |
4413 | C | தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் உதவியாளர்கள் |
· கல்வி உதவியாளர் · தீர்வு உதவியாளர் · கல்வி வள உதவியாளர் |
4031 | A | மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் |
· உயிரியல் ஆசிரியர் · நூலகர் |
கனடாவில் ஆசிரியர்களுக்கான மதிப்பிடப்பட்ட சம்பளம்
கனடாவில் ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் அவர் வசிக்கும் மாகாணம் எதுவாயினும் அங்கு அவர் அதிக லாபம் ஈட்ட இயலும். உலகில் தலை சிறந்து பணிகளில் ஒன்று ஆசிரியப் பணி. கனடா போன்ற கல்விக்கு முக்கியத்துவமளிக்கும் நாடுகளில் ஆசிரியர்கள் வெகுவாக வரவேற்கப் படுகின்றனர். அணைத்து மாகாணங்களிலும், சராசரியாக ஆண்டுதோறும் ஆசிரியர்கள் ஈட்டும் வருமானம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
கனடாவில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான சராசரி ஆண்டு சம்பளம்
மாகாணம் / பிரதேசம் (சிஏடி) | சராசரி சம்பளம் |
தேசிய சராசரி | $ 68,894 |
ஆல்பர்ட்டா | $ 70,098 |
பிரிட்டிஷ் கொலம்பியா | $ 53,031 |
புதிய பிரன்சுவிக் | $ 66,250 |
நியூஃபவுண்ட்லேண்ட் & லாப்ரடோர் | $58500 |
வடமேற்கு பிரதேசங்கள் | $ 82,000 |
நோவா ஸ்கோடியா | $ 57,675 |
ஒன்ராறியோ | $ 87,000 |
பிரின்ஸ் எட்வர்ட் தீவு | $ 63,512 |
கியூபெக் | $ 49,579 |
சஸ்காட்செவன் | $ 62,400 |
யூகோன் | $ 69,000 |
ஆசிரியராக கனடாவுக்கு குடிபெயர மிகவும் பொதுவான வழி தனித்திறன் பணியாளர்கள் பிரிவு, இது எக்ஸ்பிரஸ் நுழைவு மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு கூட்டாட்சி திட்டமாகும்.
ஏதேனுமொரு மாகாண நியமன திட்டத்தின் (PNP) கீழ் மாகாண நியமனத்திற்கு தகுதி பெற நீங்கள் முயற்சி செய்யலாம். அத்தகைய பரிந்துரை உங்களுக்கு கனடாவில் ஒரு பணியிடத்தை உறுதி செய்கிறது.
நீங்கள் வெற்றிகரமாக ஒரு பரிந்துரையைப் பெற்றால், CRS (விரிவான தரவரிசை அமைப்பு) இன் கீழ் கூடுதலாக 600 புள்ளிகளைப் பெறுவீர்கள், இது கனடா நாட்டில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க அவசியமாகிறது.
ஆசிரியர்கள் தேவைப்படும் கனேடிய மாகாணங்கள் / பிரதேசங்கள்
மாகாணம் / பிராந்தியம் | தொழில் தேவை |
---|---|
ஆல்பர்ட்டா | (4011) பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் |
பிரிட்டிஷ் கொலம்பியா | (4413) தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் உதவியாளர்கள் |
நியூஃபவுண்ட்லேண்ட் & லாப்ரடோர் |
(4011) பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் (4031) மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் |
நோவா ஸ்கோடியா | (4021) கல்லூரி மற்றும் தொழில் பயிற்றுனர்கள் |
வடமேற்கு பிரதேசங்கள் | (4214) ஆரம்பகால குழந்தை பருவ கல்வியாளர் |
பிரின்ஸ் எட்வர்ட் தீவு | (4011) பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் |
சஸ்காட்செவன் |
(4011) பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் (4021) கல்லூரி மற்றும் தொழில் பயிற்றுனர்கள் (4214) ஆரம்பகால குழந்தை பருவ கல்வியாளர் (4215) குறைபாடுகள் உள்ளவர்களுக்கு பயிற்றுவிப்பாளர் (4216) பிற பயிற்றுனர்கள் (4413) தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் உதவியாளர்கள் |
யூகோன் | (4214) ஆரம்பகால குழந்தை பருவ கல்வியாளர் |
மாகாண நியமனத்திட்டத்தின் கீழ், நீங்கள் உங்கள் ஆசிரியபணிபுரியும் துறையை தேர்ந்தெடுத்து மாகாண நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலுள்ள பட்டியலின் அடிப்படையில் உங்கள் பணிக்கு உண்டான குறியீட்டையும் அதற்கு ஏற்ற மாகாணத்தயும் தேர்வு செய்து உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். மாகாணத்தில் அழைப்பு வரும் பட்சத்தில் நீங்கள் விசா விற்கு பதிவு செய்யலாம்.
ஆசிரியராக கனடாவிற்கு குடிபெயரும் செயல் முறையை தொடங்க, இன்றே CanApprove-ஐ அணுகுங்கள். உங்களுக்கான மட்டற்ற சேவையை வழங்க எங்கள் செயற்குழு இங்கே உள்ளது
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள
அழைப்புக்கு: + 91-422-4980255 (இந்தியா) / + 971-42865134 (துபாய்)
enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்